ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 16 March 2022 11:20 PM IST (Updated: 16 March 2022 11:20 PM IST)
t-max-icont-min-icon

ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நாகப்பட்டினம்;
நாகை தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் சீதாராமன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் சுந்தரபாண்டியன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் பேசினார். கூட்டத்தில், ஓய்வூதியர்கள் தங்களது மருத்துவ சிகிச்சைக்காக செய்துள்ள செலவுத்தொகையை திருப்பி வழங்காத காப்பீட்டு நிறுவனத்தை கண்டித்தும், மத்திய அரசு வழங்குவது போல் மருத்துவ படியை ரூ.1000 உயர்த்தி வழங்க கோரியும் கோஷங்களை எழுப்பினர். முடிவில் மாவட்ட பொருளாளர் முருகேசன் நன்றி கூறினார்.

Next Story