ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகை


ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகை
x
தினத்தந்தி 16 March 2022 11:43 PM IST (Updated: 16 March 2022 11:43 PM IST)
t-max-icont-min-icon

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.

முதுகுளத்தூர், 
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள விளங்குளத்தூர் ஊராட்சிக்குட்பட்ட வெண்ணீர்வாய்க்கால் கிராமத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் 100 நாள் வேலை திட்டத்தில் முறையாக வேலை வழங்கப்படவில்லை என்றும், அதற்கான சம்பளம் வழங்காததை கண்டித்தும் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், வருடத்தில் 35 நாட்களுக்கு மட்டுமே வேலை வழங்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.
மேலும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கருப்பையாவை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் 100 நாள் வேலைத்திட்டம் தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டால் அலட்சியமாக பதில் சொல்வதாக அவர்கள் புகார் கூறினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story