மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தர்ணா


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர்  தர்ணா
x
தினத்தந்தி 16 March 2022 11:47 PM IST (Updated: 16 March 2022 11:47 PM IST)
t-max-icont-min-icon

திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திட்டக்குடி, 

திட்டக்குடி தாலுகா, ராமநத்தம் காந்திநகர் பகுதியில் வசிக்கும் இந்து ஆதியன் மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக்கோரி பலமுறை அதிகாரிகளிடம் மனுகொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்ககாததால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று காலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வட்டசெயலாளர் அன்பழகன் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் காந்திநகர் பொதுமக்கள் ஊர்வலமாக சென்று திட்டக்குடி தாலுகா அலுவலகத்தின் தரைத்தளத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதையறிந்து அங்கு வந்த தாசில்தார் கார்த்திக் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினர். தொடர்ந்து நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில் ராமநத்தம் காந்திநகரில் வழங்கப்பட்ட மனைப்பட்டாக்கள், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் நிலம் கையகப்படுத்தப்பட்டு, 268 மனைகளாக பிரிக்கப்பட்டு வழங்கப்பட்டது. இதில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலரிடம் அனுமதி பெற்று வீட்டுமனை பட்டா வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதையேற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

Next Story