கெலமங்கலம் அருகே தொழிலாளியை தாக்கியவர் கைது


கெலமங்கலம் அருகே தொழிலாளியை தாக்கியவர் கைது
x
தினத்தந்தி 16 March 2022 11:49 PM IST (Updated: 16 March 2022 11:49 PM IST)
t-max-icont-min-icon

கெலமங்கலம் அருகே தொழிலாளியை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.

ராயக்கோட்டை:
கெலமங்கலம் அருகே உள்ள தொட்டபேலூர் கிராமத்தை சேர்ந்தவர் கரகப்பா (வயது 25). கூலித்தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த லகுமப்பா (42) என்பவருக்கும் குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதில் கரகப்பாவை லகுமப்பா தாக்கினார். இதுகுறித்து கரகப்பா கெலமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லகுமப்பாவை கைது செய்தனர்.

Next Story