கெலமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு 108 ஆம்புலன்ஸ் சேவை


கெலமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு 108 ஆம்புலன்ஸ் சேவை
x
தினத்தந்தி 16 March 2022 11:49 PM IST (Updated: 17 March 2022 10:09 AM IST)
t-max-icont-min-icon

கெலமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது.

ராயக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அரசு மேம்படுத்தப்பட்ட வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தமிழக அரசு சார்பில் 108 ஆம்புலன்ஸ் சேவை வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜேஷ்குமார் தலைமை தாங்கினார். 

பேரூராட்சி தலைவர் கே.பி.தேவராஜ் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக தளி சட்டமன்ற உறுப்பினரும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சட்டமன்ற குழு தலைவரும்மான டி.ராமச்சந்திரன் கலந்து கொண்டு ஆம்புலன்ஸ் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

பின்னர் அவர் கூறுகையில், தமிழக அரசு கெலமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏழை, எளிய மக்களுக்காகவும், கர்ப்பிணிகள், தாய்மார்கள் ஆகியோரின் நலனை கருத்தில் கொண்டு உடனுக்குடன் மருத்துவ சேவையை வழங்குவதற்கு 108 ஆம்புலன்சை வழங்கி உள்ளது என்றார்.

இதில் மருத்துவர் கோபி, மருத்துவமனை அலுவலக கண்காணிப்பாளர் ராஜா, கெலமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் தமிழரசன், கெலமங்கலம் பேரூராட்சி துணைத்தலைவர் மும்தாஜ் சையத் அசேன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் ஜெயராமன், தி.மு.க. பேரூர் செயலாளர் கருணாநிதி, அ.தி.மு.க. பேரூர் செயலாளர் திம்ராயப்பா, ஒன்றிய கவுன்சிலர் சென்னிரப்பா, பேரூராட்சி கவுன்சிலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Next Story