ஆதனூரில் மாட்டு வண்டி பந்தயம் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளருக்கு பரிசு


ஆதனூரில் மாட்டு வண்டி பந்தயம்  வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளருக்கு பரிசு
x
தினத்தந்தி 16 March 2022 11:50 PM IST (Updated: 16 March 2022 11:50 PM IST)
t-max-icont-min-icon

ஆதனூரில் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

திருமயம்:
மாட்டு வண்டி பந்தயம்
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள ஆதனூர் கிராமத்தில் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடத்துவது வழக்கம். இந்நிலையில் நடப்பு ஆண்டுக்கான மாட்டு வண்டி எல்கை பந்தயம் நேற்று நடைபெற்றது. பந்தயமானது பெரிய மாடு, சிறிய மாடு என இரு பிரிவாக நடத்தப்பட்டது. சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து பெரியமாடு பிரிவில் 5 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. இதில் முதல் பரிசை அரிமளம் அய்யப்பன் மாட்டு வண்டியும், 2-ம் பரிசை கானாடுகாத்தான் சோலை ஆண்டவர் மாட்டு வண்டியும், 3-ம் பரிசை கோ.வேலங்குடி சோலையன் மாட்டு வண்டியும், 4-ம் பரிசை பாதரக்குடி ஆதித்யா மாட்டு வண்டியும் பெற்றன.
பரிசு 
இதைதொடர்ந்து நடைபெற்ற சிறிய மாடு பிரிவில் 12 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. இதில் முதல் பரிசை தேவகோட்டை பிரசாத் மாட்டு வண்டியும், 2-ம் பரிசை விராமதி செல்வமணி மாட்டு வண்டியும், 3-வது பரிசை ரெட்டவயல் மாதவன் சரண் மாட்டு வண்டியும், 4-வது பரிசை சித்தளஞ்சாம்பட்டி செண்பக பிரியா மாட்டு வண்டியும் பெற்றன. 
இதைதொடர்ந்து பந்தயத்தில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு ரொக்க பரிசு வழங்கப்பட்டது. பந்தயம் நடைபெற்ற நேமத்தான்பட்டி- கோனாபட்டு சாலையின் இருபுறமும் மக்கள் திரண்டு நின்று பந்தயத்தை கண்டு ரசித்தனர்.

Next Story