காவேரிப்பட்டணம் அருகே பிளஸ்1 மாணவி தற்கொலை
காவேரிப்பட்டணம் அருகே பிளஸ்1 மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
காவேரிப்பட்டணம்:
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள அப்புகொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சரண்யா (வயது15). அதேபகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இவருக்கு தொழுநோய் பாதிப்பு ஏற்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் நோய் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த மாணவி கடந்த 13-ந் தேதி விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் மாணவியை மீட்டு போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மாணவி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து நாகரசம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story