ஊத்தங்கரையில் பஸ்சில் கடத்தி வந்த 100 கிலோ குட்கா பறிமுதல் டிரைவர் கண்டக்டர் உள்பட 3 பேர் கைது
ஊத்தங்கரையில் பஸ்சில் கடத்தி வந்த 100 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக டிரைவர் கண்டக்டர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஊத்தங்கரை:
ஊத்தங்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு அலெக்சாண்டர் மற்றும் போலீசார் ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த தனியார் பஸ்சை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 4 பெட்டிகளில் ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள 100 கிலோ குட்கா கடத்தி சென்றது தெரியவந்தது. இதுதொடர்பாக அரூர் அருகே சந்திராபுரம் கிராமத்தை சேர்ந்த பஸ் டிரைவர் நவீன் குமார் (வயது25), இருமத்தூரை சேர்ந்த கண்டக்டர் சண்முகம் (52), ஊத்தங்கரை காமராஜ் நகரைச் சேர்ந்த கிளீனர் சிவக்குமார் (21) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் குட்காவும் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story