2 மூதாட்டிகளிடம் 9 பவுன் நகை திருட்டு


2 மூதாட்டிகளிடம் 9 பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 16 March 2022 11:51 PM IST (Updated: 16 March 2022 11:51 PM IST)
t-max-icont-min-icon

திண்டிவனத்தில் 2 மூதாட்டிகளிடம் 9 பவுன் நகை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திண்டிவனம், 
திண்டிவனம் போலீஸ் லைன் ஜெயபுரம் நாலாவது தெருவை சேர்ந்தவர் ராஜாராம். இவருடைய மனைவி சரசு (வயது 62). இவர் நேற்று காலை திண்டிவனம் நாகலாபுரம் பகுதியில் உள்ள வல்லபவிநாயகர் மற்றும்  சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். அப்போது கூட்டநெரிசலை பயன்படுத்தி அங்கிருந்தத மர்மநபர்கள், சரசுவின் கழுத்தில் கிடந்த 3 பவுன் நகையை திருடிச்சென்றனர். இதேபோல் திண்டிவனம் மயிலம் ரோடு இந்திரா நகர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணசாமி மனைவி தவமணி தேவி (64)  என்பவரின் கழுத்தில் கிடந்த 6 பவுன் நகையையும் மர்மநபர்கள் திருடிச்சென்றனர். இது குறித்து தனித்தனியாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story