பணத்தை பெற்று விட்டு நகையை கொடுக்காமல் சென்ற கூட்டுறவு உதவி மேலாளர்
பணத்தை பெற்று விட்டு நகையை கொடுக்காமல் சென்ற கூட்டுறவு உதவி மேலாளர் -விவசாயிகள் போராட்டம்
மானாமதுரை,
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே சின்னகண்ணனூர் கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் அப்பகுதி விவசாயிகள் தங்கள் நகைகளை அடகு வைத்துள்ளனர்.
இந்தநிலையில் நேற்று காலை 8 விவசாயிகள் நகை திருப்புவதற்கு கூட்டுறவு சங்கத்திற்கு வந்து ரூ. 8 லட்சத்து 73 ஆயிரம் கட்டியுள்ளனர். ஆனால் இந்த கூட்டுறவு சங்கத்தில் உதவி மேலாளராக பணிபுரியும் கோவிந்தராஜ் என்பவர் உணவு சாப்பிட்டு கை கழுவிவிட்டு வருவதாக கூறிவிட்டு நகையை கொடுக்காமல் பெட்டகத்தின் சாவியை எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. .
இதனால் விவசாயிகள் காலையில் இருந்து மாலை 5.30 மணி வரை காத்திருந்தும் அவர் வரவில்லை. இதனால் கோபமடைந்த விவசாயிகள், மற்றும் தி.மு.க. ஒன்றிய செயலாளர் அண்ணாத்துரை, ஊராட்சி மன்ற தலைவர் அங்குசாமி மற்றும் பொதுமக்கள் கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க உயர் அதிகாரிகள் உதவி மேலாளர் கோவிந்தராஜனை தேடி அழைத்து வந்து விவசாயிகளிடம் நகையை ஒப்படைத்தனர்.
அப்போது விவசாயிகள், அவரை பணியிடைநீக்கம் செய்யவேண்டும் என தொடர்ந்து போராட்டம் செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story