அறந்தாங்கி முன்மாதிரி நகராட்சியாக மாற்றப்படும் கவுன்சிலர்கள் கூட்டத்தில் தீர்மானம்
அறந்தாங்கி முன்மாதிரி நகராட்சியாக மாற்றப்படும்.
அறந்தாங்கி:
அறந்தாங்கி நகராட்சி கவுன்சிலர்களுக்கான முதல் கூட்டம் நேற்று நகராட்சி வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் ஆனந்த் தலைமை தாங்கினார். துணை தலைவர் முத்து, நகராட்சி ஆணையர் லீனா சைமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. இதற்கு அரும்பாடு பட்ட தமிழக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. தமிழ் வாழ்க என்ற பெயர் பலகை நகராட்சி அலுவலகத்தில் வைக்கவும், நகராட்சி பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பணிகள் மற்றும் அனைத்து கட்டமைப்பு பணிகள் செய்து தர தேவையான நிதிகளை அரசிடம் இருந்து பெற்று அறந்தாங்கி நகராட்சியை முன்மாதிரி நகராட்சியாக மாற்றி அமைத்திட நடவடிக்கை எடுக்கப்படும். கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டம் 2021-22 கீழ் நீர் நிலைகள் மேம்பாட்டு திட்டத்தில் சூர்யமூர்த்தி குளம், பாப்பான் குளம், ஆகிய குளங்களின் மேம்பாடு பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் 27 கவுன்சிலர்கள் கலந்து கொண்டு வார்டு பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
Related Tags :
Next Story