ஸ்கூட்டர் திருடிய 2 பேர் கைது
மயிலாடுதுறையில் ஸ்கூட்டர் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை செங்கமேட்டு தெருவை சேர்ந்தவர் ராஜூ மனைவி சூர்யா (வயது 33). இவர் கடந்த 14-ந் தேதி தனது வீட்டின் வாசலில் ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு வீட்டிற்குள் சென்று விட்டார். மறுநாள் அதிகாலை வெளியே வந்து பார்த்தபோது வீட்டின் வாசலில் நிறுத்தி வைத்திருந்த ஸ்கூட்டரை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சூர்யா, இதுகுறித்து அளித்த புகாரின்பேரில் மயிலாடுதுறை போலீசார், ஸ்கூட்டரை காணாமல் போன பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஸ்கூட்டரை திருடியவர்கள் மயிலாடுதுறை அருகே கிளியனூர் யாசர் அராபத் தெருவை சேர்ந்த தாஜூதீன் மகன் முகமது அசாருதீன் (25) என்பதும், மயிலாடுதுறை அருகே வழுவூர் திருநாள்கொண்டச்சேரி ெரயிலடி தெருவை சேர்ந்த மாரியப்பன் மகன் உத்திராபதி (35) என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து முகமது அசாருதீன், உத்திராபதி ஆகியோரை மயிலாடுதுறை போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story