ஓய்வு பெற்றோர் அமைப்பு ஆர்ப்பாட்டம்


ஓய்வு பெற்றோர் அமைப்பு ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 March 2022 12:13 AM IST (Updated: 17 March 2022 12:13 AM IST)
t-max-icont-min-icon

ஓய்வு பெற்றோர் அமைப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சிவகங்கை, மா
சிவகங்கை மின்வாரிய மேற்பார்வைபொறியாளர் அலுவலகம் முன்பு ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் போஸ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் விநாயகமூர்த்தி முன்னிலை வகித்தார். மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பாக மின் வாரியத்தை பொதுத்துறையாக நீடிக்க வேண்டும், மின்சார சட்ட திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டம் தொடர வேண்டும். 1.4.2003-க்கு முன்பும், பிறகும் பணியில் சேர்ந்து ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ஒப்பந்த பணிக்காலத்தினை சேர்த்து ஓய்வூதியம் வழங்க வேண்டும். மருத்துவ காப்பீட்டில் உள்ள குறைகளை களைய வேண்டும். 70 வயது பூர்த்தியான ஓய்வூதியம் பெற்று வருபவர்களுக்கு 10 சதம் கூடுதல் ஓய்வூதியத்தில் உயர்வு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.  இதில், மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநிலசெயலாளர் உமாநாத், சி.ஐ.டி.யூ. மாவட்ட துணை தலைவர் அழகர்சாமி, மாவட்ட பொருளாளர் அற்புதம், உள்படபலர் கலந்து கொண்டனர். 

Next Story