பத்மநாபபுரம் நீலகண்டசாமி கோவிலில் தேரோட்டம்


பத்மநாபபுரம் நீலகண்டசாமி கோவிலில் தேரோட்டம்
x
தினத்தந்தி 17 March 2022 12:15 AM IST (Updated: 17 March 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

பத்மநாபபுரம் நீலகண்டசாமி கோவிலில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

தக்கலை, 
பத்மநாபபுரம் நீலகண்டசாமி கோவிலில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
தேரோட்டம்
குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் பத்மநாபபுரம் நீலகண்ட சாமி கோவிலும் ஒன்றாகும். இங்கு பங்குனி தேர்திருவிழா கடந்த 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. தினமும் உஷபூஜை. ஸ்ரீபூதபலி, உச்சபூஜை, காலை மற்றும் இரவில் சாமியும், அம்பாளும் பவனி வருதல் நடந்தன. விழாவின் ஒன்பதாவது நாளான நேற்று தேரோட்டம் நடந்தது. 
இதற்காக காலை 9.45. மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் சிவபெருமானும், பார்வதிதேவியும் எழுந்தருளினார்கள் அதைத்தொடர்ந்து தேரை பத்மநாபபுரம் நகராட்சி தலைவர் அருள் சோபன், துணைத்தலைவர் மணி, பா.ஜனதா மாவட்ட துணைத்தலைவர் குமரி ரமேஷ், செயலாளர் ஸ்ரீனிவாச பிரம்மா, ஆர்.எஸ்.எஸ்.பொறுப்பாளர் ஜோதிந்திரன், நகராட்சி கவுன்சிலர்கள், பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். முதலில் விநாயகர் அமர்ந்திருந்த சிறிய தேர் வடம்பிடித்து இழுக்கப்பட்டது பின்னர் மற்ற இரண்டு தேர்களும் நான்கு ரதவீதிகளிலும் பவனி வந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதில் தேவசம்போர்டு தொகுதி கண்காணிப்பாளர்கள் செந்தில்குமார், சிவகுமார், மேலாளர் சுதர்சன குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story