திருப்பூர் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் காயம்
கன்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் திருப்பூர் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் காயம் அடைந்தனர்.
வெள்ளியணை,
சப்-இன்ஸ்பெக்டர்
திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொருளாதார குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் சுமதி (வயது 34). இவர் 2 நாள் விடுமுறை எடுத்துக்கொண்டு தனது தந்தை அய்யாத்துரை (73), தாய் ஆண்டாள் (63) ஆகியோருடன் கும்பகோணத்தில் உள்ள கோவிலுக்கு காரில் சென்றார்.
காரை திருப்பூர் மாவட்டம் கே.பி.என். காலனியை சேர்ந்த டிரைவர் சூர்யா (25) ஓட்டி சென்றார்.
4 பேர் காயம்
சாமி தரிசனம் முடிந்து கரூர் வழியாக திருப்பூருக்கு நேற்று அதிகாலை திரும்பி சென்று கொண்டிருந்தனர். கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஏமூர் பகுதி ரெயில்வே மேம்பாலத்தில் முன்னால் சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரியின் பின்பகுதியில் எதிர்பாராதவிதமாக கார் மோதியது. இந்த விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர் சுமதி உள்பட 4 பேரும் லேசான காயமடைந்தனர்.
பின்னர் அவர்கள் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
Related Tags :
Next Story