திருட்டு போன 20 செல்போன்கள் மீட்பு
திருட்டு போன 20 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 9-ந் தேதி முதல் 30 செல்போன்கள் திருட்டு போனதாகவும், இணையதளம் மூலமாக பணம் மோசடி நடைபெற்றதாகவும் சைபர் கிரைம் போலீசாருக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில், பெரம்பலூர் மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுப்ரமணி, இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) மனோகரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் மனோஜ், சிவமீனா (தொழில் நுட்பம்) மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் விசாரணை நடத்தி திருட்டு போன செல்போன்களில், சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான 20 செல்போன்களை கண்டறிந்து சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து மீட்டனர்.
மேலும், இணையதளம் மூலமாக பல்வேறு வகையில் பணத்தை இழந்தவர்களில், 8 பேருக்கு இழந்த தொகையான மொத்தம் ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்து 540-ஐ மீட்டனர். இதையடுத்து அதனை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி 20 செல்போன்களையும், ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்து 540-ஐ உரியவர்களிடம் ஒப்படைத்தார். பொதுமக்கள் இணையவழி மூலம் பணமோசடி புகார்களுக்கு 24 மணி நேரத்திற்குள் “1930” என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை அழைத்து புகார் தெரிவிக்கலாம். சைபர் குற்றங்களுக்கு www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகாரை பதிவு செய்யலாம் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கேட்டுக்கொண்டார்.
Related Tags :
Next Story