அரசு வக்கீல் நியமனம் ரத்து


அரசு வக்கீல் நியமனம் ரத்து
x
தினத்தந்தி 17 March 2022 12:45 AM IST (Updated: 17 March 2022 12:45 AM IST)
t-max-icont-min-icon

அரசு வக்கீல் நியமனம் ரத்து-மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

மதுரை
தேனியைச் சேர்ந்த வக்கீல் ராஜா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், பெரியகுளம் முன்சீப் கோர்ட்டில் ஆரிப் ரகுமான் என்பவர் அரசு வக்கீலாக நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே அவரை அரசு வக்கீலாக நியமித்ததை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்து பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
பெரியகுளம் முன்சீப் கோர்ட்டில் அரசு வக்கீலாக நியமிக்கப்பட்டுள்ள ஆரிப் ரகுமான் மீதான வழக்குகளில் பல வழக்குகள், தவறுதலாக பதியப்பட்டவை என்றும், சில வழக்குகள் முன்விரோதம் காரணமாக பதியப்பட்டவை என்றும் போலீசார் விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுவாக அரசு வக்கீல் நியமனத்தின் போது அவர்களின் நடத்தை, தகுதி, கல்வித்தரம், அப்பதவிக்கு பொருத்தமானவரா? என்பது குறித்து விசாரிக்கப்பட வேண்டும்.
அரசு வக்கீலாக நியமிக்கப்படுபவர்கள் நேர்மை மற்றும் நன்னடத்தையுடன் இருப்பது அவசியம். இதுபற்றி விசாரித்து அதன்பின்பு தகுதியின் அடிப்படையில் அந்த பதவியில் நியமிக்க வேண்டும். அந்த வகையில் பெரியகுளம் முன்சீப் கோர்ட்டின் அரசு வக்கீலாக ஆரிப் ரகுமானை நியமித்த அரசாணை ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story