விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 March 2022 1:52 AM IST (Updated: 17 March 2022 1:52 AM IST)
t-max-icont-min-icon

கடையநல்லூரில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கடையநல்லூர்:
திருமங்கலம்-கொல்லம் இடையிலான விவசாய நிலங்கள் மற்றும் வன விலங்குகளின் வாழ்விடங்கள் வழியாக செயல்படுத்தப்படும் நான்கு வழிச்சாலை திட்டத்தை விவசாயத்துக்கு பாதிப்பில்லாமல் மாற்றுப்பாதையில் நிறைவேற்றக்கோரியும், விவசாய நிலங்கள் பாதிக்கப்படாமல் இத்திட்டம் நிறைவேற்றப்படும் என தி.மு.க. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றக்கோரியும் அனைத்து விவசாய சங்கங்கள், எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஒருங்கிணைந்து ஆர்ப்பாட்டத்தை கடையநல்லூர் மணிக்கூண்டு அருகில் நடத்தின. இந்த ஆர்ப்பாட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில துணைத்தலைவர் அப்துல் ஹமீது, விவசாய அணி மாநில தலைவர் ஷேக் அப்துல்லாஹ், விவசாய சங்க நிர்வாகிகள் மாடசாமி, மீராகனி, ரெசவுமைதீன், சாரதி ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் திரளான விவசாயிகள் மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கலந்து கொண்டனர்.

Next Story