கடந்த 2020-ம் ஆண்டு வேலையின்மையால் கர்நாடகத்தில் 720 பேர் தற்கொலை
கடந்த 2020-ம் ஆண்டு வேலையின்மையால் கர்நாடகத்தில் 720 பேர் தற்கொலை செய்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது.
பெங்களூரு:
நாடு முழுவதும் நடைபெறும் குற்றங்கள், விபத்துகள், தற்கொலைகள் குறித்து தேசிய குற்ற ஆவண காப்பகம் அறிக்கை வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு நாட்டில் தற்கொலை செய்து கொண்டவர்கள் பற்றி ஒரு அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
நாட்டில் கடந்த 2020-ம் ஆண்டு 3,548 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இதில் அதிகபட்சமாக கர்நாடகத்தில் 720 பேர் தற்கொலை செய்து கொண்டனர். மராட்டியத்தில் 625 பேர் தங்களது உயிரை மாய்த்து இருந்தனர். கர்நாடகத்தில் கடந்த 2016-ம் ஆண்டு 224 பேரும், 2017-ல் 375 பேரும், 2018-ல் 464 பேரும், 2019-ல் 553 பேரும் தற்கொலை செய்து உள்ளனர். கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக பலர் வேலை இழந்தனர். இதனால் ஏற்பட்ட மனஅழுத்தம், வேலையின்மை காரணமாக 720 பேர் தற்கொலை செய்து உள்ளனர்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story