சாலை விபத்தில் படுகாயமடைந்த விவசாயி சாவு


சாலை விபத்தில் படுகாயமடைந்த விவசாயி சாவு
x
தினத்தந்தி 17 March 2022 2:25 AM IST (Updated: 17 March 2022 2:25 AM IST)
t-max-icont-min-icon

சாலை விபத்தில் படுகாயமடைந்த விவசாயி உயிரிழந்தார்

விக்கிரமங்கலம்
அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே உள்ள கீழநத்தம் பகுதியை  சேர்ந்தவர் கருணாநிதி (வயது 57). விவசாயி. இவர் சம்பவத்தன்று இரவு குணமங்கலம் பகுதியிலுள்ள தனது விவசாய நிலத்திற்கு சென்று விட்டு மொபட்டில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். ஆரியான் ஏரி அருகே அவர் வந்தபோது முன்னால் நடந்து சென்று கொண்டிருந்த மாரிமுத்து (60) என்பவர் மீது எதிர்பாராதவிதமாக மொபட் மோதியது. இதில் இருவரும் படுகாயமடைந்தனர். அவர்களில் கருணாநிதி திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையிலும், மாரிமுத்து தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களில் நேற்று முன்தினம் கருணாநிதி சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த விபத்து குறித்து விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருணாநிதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story