முதியவர் உள்பட 2 பேரிடம் ரூ.3½ லட்சம் மோசடி


முதியவர் உள்பட 2 பேரிடம் ரூ.3½ லட்சம் மோசடி
x
தினத்தந்தி 17 March 2022 2:31 AM IST (Updated: 17 March 2022 2:31 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் முதியவர் உள்பட 2 பேரிடம் ரூ.3½ லட்சம் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்:-
சேலத்தில் முதியவர் உள்பட 2 பேரிடம் ரூ.3½ லட்சம் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதியவரிடம் மோசடி
சேலம் சூரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் குருமூர்த்தி (வயது 60). அவருடைய செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி ஒன்று வந்தது. அதில் உங்களது வங்கிக்கணக்கு முடக்கப்பட்டுள்ளதால் குறிப்பிட்ட லிங்கை பதிவிறக்கம் செய்து புதுப்பித்து கொள்ளலாம் என்று கூறப்பட்டிருந்தது. இதை உண்மை என நம்பிய குருமூர்த்தி அந்த லிங்கை பதிவிறக்கம் செய்து அதில் வங்கிக்கணக்கின் எண் உள்ளிட்ட விவரங்களை குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து அவரது வங்கிக்கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்து 99 ஆயிரத்து 991 எடுக்கப்பட்டது. இதையறிந்த குருமூர்த்தி இந்த மோசடி குறித்து சேலம் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
வங்கி விவரங்கள்
சேலம் சூரமங்கலம் எஸ்.எஸ்.நகரை சேர்ந்தவர் சாகுல் ஹமீது (52). அவருடைய செல்போன் எண்ணுக்கும் வங்கி விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என்று குறுஞ்செய்தி வந்தது. அதன்பேரில் அவரும் குறுஞ்செய்தியில் இருந்த லிங்கை பதிவிறக்கம் செய்து வங்கிக்கணக்கு எண், பான் கார்டு விவரம், ஓ.டி.பி. எண் உள்ளிட்ட விவரங்களை பதிவிட்டுள்ளார்.
அதைத்தொடர்ந்து அவரது வங்கிக்கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்து 58 ஆயிரத்து 128 எடுத்து மோசடி செய்யப்பட்டது. இதுகுறித்து சாகுல் ஹமீது சேலம் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story