சென்னிமலை முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழா; கொடியேற்றத்துடன் தொடங்கியது


சென்னிமலை முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழா; கொடியேற்றத்துடன் தொடங்கியது
x
தினத்தந்தி 17 March 2022 2:33 AM IST (Updated: 17 March 2022 2:33 AM IST)
t-max-icont-min-icon

சென்னிமலை முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சென்னிமலை
சென்னிமலை முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சென்னிமலை முருகன் கோவில் 
சென்னிமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. 
இந்த கோவிலில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு நாளை (வெள்ளிக்கிழமை) காலை பங்குனி உத்திர தேரோட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி நேற்று காலை 7 மணி அளவில் சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் இருந்து உற்சவ மூர்த்திகளை படிக்கட்டுகள் வழியாக மலைமேல் உள்ள முருகன் கோவிலுக்கு பக்தர்கள் அழைத்து சென்றனர். அங்கு உற்சவர் மற்றும் மூலவருக்கு அபிஷேகங்கள் நடைபெற்றது.
கொடியேற்றம்
அப்போது சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு முருகப்பெருமான் அருள்பாலித்தார். பின்னர் கோவிலின் முன்பு உள்ள கொடி மரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மதியம் 12.30 மணி அளவில் சேவல் கொடியேற்றப்பட்டது.
இதைத்தொடர்ந்து மாலை 5 மணி அளவில் உற்சவ மூர்த்திகள் மீண்டும் படிக்கட்டுகள் வழியாக கைலாசநாதர் கோவிலுக்கு அழைத்து வரப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் சென்னிமலை கோவில் செயல் அலுவலர் மு.ரமணி காந்தன், கட்டளைதாரர்கள் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story