காரியாபட்டி அருகே மீன்பிடி திருவிழா
காரியாபட்டி அருகே மீன்பிடி திருவிழா நடைபெற்றது. அப்போது கண்மாயில் இறங்கி மீன்களை கிராம மக்கள் அள்ளி சென்றனர்.
காரியாபட்டி,
காரியாபட்டி அருகே மீன்பிடி திருவிழா நடைபெற்றது. அப்போது கண்மாயில் இறங்கி மீன்களை கிராம மக்கள் அள்ளி சென்றனர்.
மீன்பிடி திருவிழா
காரியாபட்டி பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழைக்கு அனைத்து கண்மாய்களிலும் தண்ணீர் நிரம்பியது. இதேபோல் வையம்பட்டி கிராமத்தில் உள்ள கண்மாயிலும் தண்ணீர் நிரம்பியது.
இந்த கண்மாய் நிரம்பி பல வருடங்கள் ஆகிவிட்டது. இந்த வருடம் தண்ணீர் நிரம்பியதால் கண்மாயில் உள்ள தண்ணீர் வற்றியவுடன் ஊர் பொதுமக்கள் கூடி மீன்பிடி திருவிழா நடத்தினர். அப்போது கண்மாயில் பொதுமக்கள் கெண்டை, அயிரை, கெழுத்தி போன்ற எண்ணற்ற மீன்களை பிடித்து மகிழ்ந்தனர்.
பொதுமக்கள் மகிழ்ச்சி
பல வருடங்கள் கழித்து இந்த ஆண்டு வையம்பட்டி கண்மாயில் மீன் உற்பத்தியாகி மீன்பிடித்துள்ளதாக பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
இதேபோன்று ஒவ்வொரு வருடமும் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டும் என்றும் பொதுமக்களும், விவசாயிகளும் இறைவனை வேண்டி சென்றனர்.
Related Tags :
Next Story