கோவில்கள் திருவிழாவை முன்னிட்டு பண்ணாரி, பழனிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்; கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தகவல்
கோவில்கள் திருவிழாவை முன்னிட்டு ஈரோட்டில் இருந்து பண்ணாரி, பழனிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்என்று மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.
ஈரோடு
கோவில்கள் திருவிழாவை முன்னிட்டு ஈரோட்டில் இருந்து பண்ணாரி, பழனிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
குண்டம் விழா
பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் மற்றும் மறுபூஜை திருவிழாவை முன்னிட்டு பொதுமக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஈரோடு மண்டலம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
வருகிற 21-ந் தேதி, 22-ந் தேதி மற்றும் 28-ந் தேதி ஆகிய நாட்களில் கோவை, மேட்டுப்பாளையம், திருப்பூர், ஈரோடு, கோபிசெட்டிபாளையம், கவுந்தப்பாடி, பவானி, சத்தியமங்கலம், புஞ்சை புளியம்பட்டி, மைசூர், நம்பியூர், பவானிசாகர் ஆகிய இடங்களில் இருந்து பண்ணாரிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
பங்குனி உத்திரம்
இதேபோல் பங்குனி உத்திரம் திருவிழாவை முன்னிட்டு பொதுமக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஈரோடு மண்டலம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
இன்று (வியாழக்கிழமை) முதல் 19-ந் தேதி வரை ஈரோடு, அந்தியூர், கொடுமுடி, கரூர், பவானி, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், சேலம் ஆகிய இடங்களில் இருந்து பழனிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
இந்த சிறப்பு பஸ்கள் வசதியை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story