போலியோ சொட்டு மருந்து வழங்கிய நர்சுகளுக்கு மேயர் பிரியா சான்றிதழ் வழங்கி பாராட்டு
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் கடந்த மாதம் 27-ந் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 6 லட்சத்து 19 ஆயிரத்து 159 குழந்தைகள் பயன் அடைந்தனர்.
இந்நிலையில், தேசிய தடுப்பூசி தினத்தையொட்டி, ரிப்பன் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், பெருநகர சென்னை மாநகராட்சியில் 2022-ம் ஆண்டில் அதிக எண்ணிக்கையில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய நகர சுகாதார நர்சுகள், துணை நர்சுகள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களின் சிறப்பான பணியை பாராட்டி பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா நேற்று சான்றிதழ்களை வழங்கினார்.
ஒரு மண்டலத்துக்கு 3 நபர்கள் வீதம் 45 பணியாளர்களுக்கு நேற்று சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, துணை கமிஷனர் டாக்டர் எஸ்.மனிஷ், மாநகர மருத்துவ அலுவலர் டாக்டர் ஹேமலதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story