தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை


தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 17 March 2022 5:08 PM IST (Updated: 17 March 2022 5:08 PM IST)
t-max-icont-min-icon

விளாத்திகுளத்தில் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்

எட்டயபுரம்:
விளாத்திகுளம் அண்ணாமலை நகர் பகுதியை சேர்ந்த ராமு கோனார் மகன் கருப்பசாமி (வயது 64). இவர் ஆடு மேய்க்கும் தொழிலாளி. கடந்த சில நாட்களாக அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார். இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சைபெற்றும் நோய் குணமாகவில்லை என கூறப்படுகிறது. இந்தநிலையில் சம்வத்தன்று இரவு எட்டயபுரம் சென்று வருவதாகக் கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரை குடும்பத்தினர் தேடி வந்தனர்.
நேற்று காலையில் பெருநாழி விலக்கு பஸ்நிறுத்தம் பின்புறம் உள்ள புளிய மரத்தில் அவர் தூக்கில் பிணமாக தொங்குவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தனர். அந்த பகுதிக்கு சென்ற விளாத்திகுளம் போலீசார் அவரது உடலைக் கைப்பற்றிய  பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story