காளிப்பட்டி வீரகாரன் சாமி கோவிலில் சிறப்பு பூஜை
காளிப்பட்டி வீரகாரன் சாமி கோவிலில் சிறப்பு பூஜை
மல்லசமுத்திரம்:
மல்லசமுத்திரம் அருகே காளிப்பட்டி கந்தசாமி கோவில் பின்புறம் ஸ்ரீ வீரகாரன் சாமி கோவில் உள்ளது. காளிப்பட்டி சந்தை கூடும் பகுதி எதிரில் ஸ்ரீ புடவைக்காரி அம்மன் கோயில் உள்ளது. இந்த 2 கோவில்களிலும் நேற்று சிறப்பு அபிஷேகம், பூஜை, சாப விமோசன வழிபாடு நடந்தது. செம்மண்திட்டு சித்த வைத்தியர் பழனிசாமி, அய்யன் துரை, ராமச்சந்திரன் ஆகியோர் தலைமையில் சிறப்பு பூஜை நடைபெற்றது. கோவில் பூசாரிகள் ராஜமாணிக்கம், பெருமாள் ஆகியோர் சிறப்பு பூஜை செய்து தக்காளி சாதம், சர்க்கரை பொங்கல் போன்ற பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதில் முத்தனம்பாளையம், செம்மண்திட்டு, சின்ன திருப்பதி ஆகிய பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story