நல்லம்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் அரிசிமாவு பாரம் ஏற்றி வந்த சரக்கு வேன் கவிழ்ந்து விபத்து-டிரைவர் உள்பட 2 பேர் படுகாயம்
நல்லம்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் அரிசிமாவு பாரம் ஏற்றி வந்த சரக்கு வேன் கவிழ்ந்து டிரைவர் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
நல்லம்பள்ளி:-
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் இருந்து சேலம் மாவட்டத்திற்கு அரிசிமாவு பாரம் ஏற்றிக்கொண்டு சரக்கு வேன் ஒன்று இன்று வந்தது. இந்த சரக்கு வேன், நல்லம்பள்ளி அருகே உள்ள குடிப்பட்டி தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அருகே வந்தது. சரக்கு வேனை, காரிமங்கலம் பகுதியைச் சேர்ந்த கேசவன் (45) என்பவர் ஓட்டி வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த நல்லதம்பி (48) என்பவர் உடன் வந்தார்.
குடிப்பட்டி மேம்பாலத்தை கடக்க முயன்ற போது சரக்கு வேனின் பின்பக்க டயர் ஒன்று வெடித்ததில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிரைவர் உள்பட 2 பேரும் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் விபத்தில் சிக்கிய 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்துக்குள்ளான வாகனத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. விபத்து குறித்து அதியமான்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story