ஓட்டல் ஊழியரை பீர்பாட்டிலால் குத்திய தொழிலாளி கைது


ஓட்டல் ஊழியரை பீர்பாட்டிலால் குத்திய தொழிலாளி கைது
x
தினத்தந்தி 17 March 2022 6:41 PM IST (Updated: 17 March 2022 6:41 PM IST)
t-max-icont-min-icon

குடியாத்தத்தில் ஓட்டல் ஊழியரை பீர்பாட்டிலால் குத்திய தொழிலாளி கைது ெசய்யப்பட்டார்

 குடியாத்தம்

வேலூர் மாவட்டம், குடியாத்தம் நேதாஜி சவுக் மேல்பட்டி ரோடு பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில், குடியாத்தம் காமாட்சியம்மன் பேட்டை கே.கே.முதலிதெருவைச் சேர்ந்த தனசேகரன் (வயது 52) என்பவர் வேலைபார்த்து வருகிறார்.

 இன்று காலையில் நெல்லூர்பேட்டை பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சந்திரசேகர் (43) தனது நண்பர்களுடன் அந்த ஓட்டலுக்கு சாப்பிட வந்துள்ளார்.

 அப்போது சந்திரசேகருக்கும், சர்வருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

கடையில் இருந்த ஊழியர் தனசேகரன், சந்திரசேகரை சமாதானம் செய்துள்ளார். 

அப்போது சந்திரசேகர் மறைத்து வைத்திருந்த  பீர் பாட்டிலை உடைத்து தனசேகரின் முகத்தில் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் கண், முகம் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. 

இதனால் ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் அங்கிருந்து ஓடினர்.

 உடனடியாக தனசேகரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து சந்திரசேகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story