தூத்துக்குடியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்
தூத்துக்குடியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை நடக்கிறது
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது.
இது குறித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
வேலைவாய்ப்பு முகாம்
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மேற்பார்வையில், தூத்துக்குடிமாவட்டவேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவ ழிகாட்டும் மையம், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் தூத்துக்குடி காமராஜ் கல்லூரி ஆகியவை இணைந்து இணைந்து, வேலை தேடும் இளைஞர்கள் அனைவரும் வேலைவாய்ப்பு பெறும் வகையில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நடததப்படுகிறது. இந்த முகாம் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு நடக்கிறது. முகாமுக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்குகிறார். சிறப்பு அழைப்பாளர்களாக தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறைஅமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்க உள்ளனர்.
உதவித்தொகை
இதில் தூத்துக்குடி மாவட்டம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 100-க்கும் மேற்பட்ட முன்னனி தனியார் நிறுவனங்கள் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட திறன் பயிற்சி நிறுவனங்களும் பங்கேற்க உள்ளன. இந்த மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 8-ம் வகுப்பு முதல் முதுநிலைபட்டதாரி, டிப்ளமோ, ஐ.டி.ஐ. படித்தவர்கள் உள்பட அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறலாம். முகாமில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகைக்கான விண்ணப்பமும் வழங்கப்பட உள்ளது. எனவே, மாற்றுத்திறனாளிகள் மற்றும் இதுவரை இந்த திட்டத்தில் பயன்பெறாதவர்கள் அசல் வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் வங்கிக்கணக்கு ஆரம்பித்து வங்கிக்கணக்குப் புத்தகம், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை ஆகியவற்றின் நகல்களுடன் முகாமில் கலந்துகொள்ளலாம். தனியார் நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டாலோ அல்லது வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை பெற்று வந்தாலோ அவர்களின் வேலைவாய்ப்புபதிவு மூப்பு ரத்து செய்யப்படமாட்டாது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Related Tags :
Next Story