குடிசை வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதில் ஆடு கருகி பலி


குடிசை வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதில் ஆடு கருகி பலி
x
தினத்தந்தி 17 March 2022 7:06 PM IST (Updated: 17 March 2022 7:06 PM IST)
t-max-icont-min-icon

குடிசை வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதில் ஆடு கருகி பலியானது.

வாணியம்பாடி

திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயத்தை அடுத்த நிம்மியம்பட்டு கிராமத்தில் நெத்திலி அம்மன் கோவில் வட்டத்தில் உள்ள ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான குடிசை வீட்டில்   தீவிபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் நிலைய அலுவலர் முருகன் தலைமையில் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் வீடு முழுவதும் எரிந்து சேதம் அடைந்து, வீட்டில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஆடு கருகி இறந்தது. பீரோவில் இருந்த பொருட்களும், துணிமணிகளும் எரிந்து சாம்பலானது.

Next Story