பள்ளிப்பட்டு அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை


பள்ளிப்பட்டு அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை
x
தினத்தந்தி 17 March 2022 8:04 PM IST (Updated: 17 March 2022 8:06 PM IST)
t-max-icont-min-icon

பள்ளிப்பட்டு அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

விவசாயி

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா நெடியம் கிராமத்தை சேர்ந்தவர் முனி சந்திரா (வயது 45). விவசாயி. இவர் வேறு ஒருவர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து அதில் பயிர் செய்ய நினைத்தார். இதற்காக பணம் இல்லாமல் தவித்த அவர் மனைவியின் நகைகளை தனியார் அடகு கடையில் அடமானம் வைத்து பணத்தை வாங்கி நெற்பயிர் செய்தார். இதில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் நகைகளை மீட்க முடியாமல் மன உளைச்சலில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் இவரது மனைவி தரணி (35) நகைகளை மீட்டுத்தர கோரி கணவனை நச்சரித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த விவசாயி முனி சந்திரா 2 நாட்களுக்கு முன்னர் விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.

தற்கொலை

அவரை சிகிச்சைக்காக உறவினர்கள் ஆந்திர மாநிலம் நகரியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அதன்பிறகு அவரை மேல்சிகிச்சைக்காக திருப்பதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் விவசாயி முனி சந்திரா நேற்று பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து அவரது மனைவி தரணி பள்ளிப்பட்டு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட முனி சந்திராவிற்கு ரோஜா (15) என்ற மகளும், மதன் (12) என்ற மகனும் உள்ளனர்.


Next Story