எருது விடும் விழாவில் காளைகள் முட்டி 30 பேர் காயம்


எருது விடும் விழாவில் காளைகள் முட்டி 30 பேர் காயம்
x
தினத்தந்தி 17 March 2022 8:04 PM IST (Updated: 17 March 2022 8:04 PM IST)
t-max-icont-min-icon

கேசவபுரத்தில் எருது விடும் விழாவில் காளைகள் முட்டி 30 பேர் காயம்

அடுக்கம்பாறை,

வேலூரை அடுத்த பென்னாத்தூர் அருகே உள்ள கேசவபுரம் கிராமத்தில் எருது விடும் திருவிழா இன்று நடந்தது. 

வேலூர் தாசில்தார் செந்தில் தலைமை தாங்கினார். பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் கருணாகரன், அண்ணாத்துரை, வருவாய் ஆய்வாளர் உலகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராம நிர்வாக அலுவலர் லட்சுமிகாந்தம் வரவேற்றார். 

அதிகாரிகள் உறுதிமொழி ஏற்றதை தொடர்ந்து காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டது. 

சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 354 மாடுகள் பங்கேற்றது. விழாவில் மாடுகள் முட்டியதில் 30 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. 
போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்காத 30-க்கும் மேற்பட்ட காளைகளுக்கு வசூல் செய்யப்பட்ட பணத்தை திருப்பி வழங்கக்கோரி காளைகளின் உரிமையாளர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். 

அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சமரசம் செய்து அவர்களை கலைத்தனர். 

தொடர்ந்து காளை உரிமையாளர்களுக்கு பணம் திருப்பிக் கொடுக்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story