என்ஜினீயர் வீட்டில் உலோக சிலை- வெள்ளி பொருட்கள் திருட்டு
நாகூர் அருகே என்ஜினீயர் வீட்டில் உலோக சிலை மற்றும் வெள்ளி பொருட்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
நாகூர்:-
நாகூர் அருகே என்ஜினீயர் வீட்டில் உலோக சிலை மற்றும் வெள்ளி பொருட்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
என்ஜினீயர்
நாகை மாவட்டம் நாகூர் அருகே உள்ள வடகடம்பகுடி அக்ரஹாரம் தெருவை சேர்ந்தவர் அசோகன் (வயது51). கட்டிட என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 13-ந் தேதி தனது பெற்றோரின் உடல் பரிசோதனைக்காக சென்னையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்றிருந்தார். நேற்று அதிகாலை அவர் வீட்டுக்கு வந்த பார்த்தபோது, வீட்டு கதவு உடைக்கப்பட்டு இருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்வையிட்டார். அப்போது பூஜை அறையில் இருந்த ½ பவுன் சங்கிலி, 25 கிராம் எடை கொண்ட 2 வெள்ளி குத்து விளக்குகள், 1 கிலோ எடை கொண்ட உலோகத்தால் ஆன அம்மன் சிலை உள்ளிட்டவற்றை காணவில்லை.
வலைவீச்சு
வீட்டில் ஆட்கள் இல்லை என்பதை அறிந்த மர்ம நபர்கள் உலோக சிலை மற்றும் வெள்ளி பொருட்கள் உள்ளிட்டவற்றை திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த நாகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் திருட்டு நடந்த வீட்டுக்கு சென்று பார்வையிட்டனர்.
திருடப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ.50 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்து அசோகன் அளித்த புகாரின்பேரில் நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story