திருவள்ளூரில் பெண் போலீசாருக்கு முழு உடல் பரிசோதனை


திருவள்ளூரில் பெண் போலீசாருக்கு முழு உடல் பரிசோதனை
x
தினத்தந்தி 17 March 2022 8:16 PM IST (Updated: 17 March 2022 8:18 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூரில் பெண் போலீசாருக்கு முழு உடல் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

திருவள்ளூரில் நேற்று தமிழ்நாடு போலீஸ் துறை இயக்குனர் உத்தரவின்பேரில் திருவள்ளூர் மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து பெண் போலீசார் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் உடல் நலத்தை காக்கும் விதமாக உலக மகளிர் தினத்தையொட்டி முழு உடல் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் வருண்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக பால்வளத்துறை அமைச்சரும், தி.மு.க.வின் திருவள்ளூர் மத்திய மாவட்ட பொறுப்பாளருமான ஆவடி சா.மு.நாசர் கலந்து கொண்டு முழு உடல் பரிசோதனை முகாமை தொடங்கி வைத்து நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அவருடன் திருவள்ளூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், தி.மு.க.வின் தலைமை செயற்குழு உறுப்பினருமான வி.ஜி.ராஜேந்திரன், திருவள்ளூர் நகரமன்ற தலைவர் பொன்.பாண்டியன், நகரமன்ற துணைத்தலைவர் ரவிச்சந்திரன், பொதுக்குழு உறுப்பினர் திராவிட பக்தன், மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் களாம்பாக்கம் பன்னீர் செல்வம், ஒன்றிய செயலாளர்கள் ஜெயசீலன், கூளூர் ராஜேந்திரன், மாவட்ட நிர்வாகி சிட்டி பாபு, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் மீனாட்சி, ஜேசுராஜ், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சந்திரதாசன், தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் முருகன், திருவள்ளூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி மற்றும் திரளான போலீசார், நகரமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். பெண் போலீசாருக்கான முழு உடல் பரிசோதனை முகாமில் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 200-க்கும் மேற்பட்ட பெண் போலீசார் மற்றும் அவரது குடும்பத்தினர் கலந்து கொண்டு கண், காது, மூக்கு உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு இலவசமாக பரிசோதனை செய்து பயன் பெற்றனர்.


Next Story