வளர்ச்சி திட்டப்பணிகள் முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. ஆய்வு
திருமருகல் ஒன்றியத்தில் நடந்த வளர்ச்சி திட்டப்பணிகளை முகமதுஷாநவாஸ் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
திட்டச்சேரி:-
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் நெய்குப்பை- திருப்பயத்தங்குடி இடையே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.3 கோடியே 54 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணி உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளை முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். அதனை தொடர்ந்து நாட்டார்மங்கலத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தை ஆய்வு செய்தார். அப்போது குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்துணவு குறித்து கேட்டறிந்தார். அப்போது ஒன்றிய ஆணையர் பாலமுருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் பாத்திமா ஆரோக்கியமேரி, ஒன்றியக்குழு உறுப்பினர் சரவணன், ஒன்றிய பொறியாளர் செந்தில் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story