நிலத்தில் பயிரிட்டு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் கைது


நிலத்தில் பயிரிட்டு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் கைது
x
தினத்தந்தி 17 March 2022 9:19 PM IST (Updated: 17 March 2022 9:19 PM IST)
t-max-icont-min-icon

நிலத்தில் பயிரிட்டு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் கைது

திருவண்ணாமலை

ஜமுனாமரத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனையை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் உத்தரவின் பேரில் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஜமுனாமரத்தூரை அடுத்த திமிரி மரத்தூர் கிராமத்தில் நடராஜன் (வயது 47) என்பவர் தனது நிலத்தில் கஞ்சா செடி பயிரிட்டு வளர்த்துள்ளார். 

பின்னர் அதனை காய வைத்து பொட்டலம் கட்டி நிலத்தில் மறைத்து வைத்து அவ்வப்போது விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக போலீசாருக்கு  தகவல் கிடைத்தது. 

இதையடுத்து நடராஜனின் நிலத்திற்கு ஜமுனாமரத்தூர் போலீசார் விரைந்து சென்று சோதனை நடத்தினர். 

அப்போது நிலத்தில் உள்ள கொட்டகையில் சுமார் 4 கிலோ எடையுள்ள கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. 

இதையடுத்து போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து நடராஜனை கைது செய்தனர்.

Next Story