இலவச தர பரிசோதனை செய்து விளைபொருட்களுக்கு கூடுதல் விலை
இலவச தர பரிசோதனை செய்து விளைபொருட்களுக்கு கூடுதல் விலை
போடிப்பட்டி,
உடுமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் உள்ள ஆய்வகத்தில் இலவச தர பரிசோதனை செய்வதன் மூலம் விளை பொருட்களுக்கு கூடுதல் விலை பெறலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொருளீட்டுக்கடன்
உடுமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை இருப்பு வைத்து விற்பனை செய்யும் வகையில் உடுமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
இங்கு இருப்பு வைக்கும் பொருட்களுக்கு பொருளீட்டுக்கடன் பெறும் வசதியும் உள்ளது.
இந்தநிலையில் இங்குள்ள ஆய்வகத்தில் பணியாற்றும் அலுவலர்களுக்கான தரப்பரிசோதனை மேம்பாட்டுப்பயிற்சி நேற்று நடைபெற்றது.
பல்லடம் அக்மார்க் ஆய்வகத்திலிருந்து வந்திருந்த வேளாண் அலுவலர் அனிதா (வேளாண் விற்பனை மற்றும் வணிகம்) பயிற்சி வழங்கினார்.இந்த பயிற்சியில் தரப்பகுப்பாய்வாளர்கள் தமிழீழக்கனலி (உடுமலை), சண்முகப்பிரியன் (பெதப்பம்பட்டி), ஆய்வக உதவியாளர்கள் பிரசாந்த், தங்கவேலு ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூடுதல் விலை
அப்போது அதிகாரிகள் கூறியதாவது:-
விவசாயிகள் மக்காச்சோளம், கொப்பரை, சோளம், நெல், கடலை, நிலக்கடலை, சூரியகாந்தி உள்ளிட்ட விளைபொருட்களை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திலுள்ள ஆய்வகங்களில் இலவசமாக தரப்பரிசோதனை செய்து கொள்ளலாம்.
இவ்வாறு தரப்பரிசோதனை சான்று பெறுவதால், தேசிய வேளாண் சந்தை மூலம் இந்தியா முழுவதுமுள்ள வியாபாரிகளிடம் பொருட்களை விற்பனை செய்து கூடுதல் விலை பெற முடியும்.
மேலும் இதற்கான தொகை ஒரே நாளில் பாதுகாப்பான முறையில் விவசாயிகளின் வங்கிக் கணக்குக்கு அனுப்பப்படுகிறது. இதனால் விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் வாய்ப்பு உருவாக்கப்படுகிறது.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
Related Tags :
Next Story