ஊட்டி குன்னூர் சாலையில் தீ
ஊட்டி குன்னூர் சாலையில் தீப்பிடித்தது.
ஊட்டி
ஊட்டி-குன்னூர் சாலை மேல் தலையாட்டுமந்து பகுதியில் குடியிருப்பை ஒட்டி உள்ள புல்வெளியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த ஊட்டி தீயணை ப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைக்க முயன்றனர். காய்ந்த செடிகள், குப்பைகளுக்கும் தீ பரவியதால் மளமளவென பற்றி எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.
குடியிருப்பு பகுதியில் காய்ந்த செடிகள், குப்பைகளுக்கு தீ வைத்ததால் எரிந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வனப்பகுதியை ஒட்டி உள்ள பகுதிகளுக்கு தீ வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story