புறம்போக்கு நிலத்தில் உள்ள வீடுகளை காலி செய்யாமல் இருக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மேயரை சந்தித்து முறையிட்டனர்


புறம்போக்கு நிலத்தில் உள்ள வீடுகளை காலி செய்யாமல் இருக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மேயரை சந்தித்து முறையிட்டனர்
x
தினத்தந்தி 17 March 2022 9:49 PM IST (Updated: 17 March 2022 9:49 PM IST)
t-max-icont-min-icon

புறம்போக்கு நிலத்தில் உள்ள வீடுகளை காலி செய்யாமல் இருக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மேயரை சந்தித்து முறையிட்டனர்

திருப்பூர்:
திருப்பூர் பட்டுக்கோட்டையார் நகர் ஓடை புறம்போக்கு நிலத்தில் உள்ள வீடுகளை காலி செய்யாமல் இருக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மேயரை சந்தித்து முறையிட்டனர்.
ஓடைபுறம்போக்கு நிலம்
திருப்பூர் மாநகராட்சி 55-வது வார்டுக்கு உட்பட்ட பட்டுக்கோட்டையார்நகர் பகுதியை சேர்ந்த மக்கள் நேற்று மதியம் திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் மேயர் தினேஷ்குமாரை சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
கடந்த 42 ஆண்டுகளாக குடும்பத்தோடு இங்கு குடியிருந்து வருகிறோம். சொந்தமாக இடம் வாங்க வசதியில்லை. தினக்கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம். ஓலை குடிசையில் வசித்து வந்த நாங்கள் பின்னர் ஓட்டு வீடு கட்டி வசிக்கிறோம். திருப்பூர் வளர்ச்சி பெறாத காலத்தில் இருந்து குடியிருந்து வருகிறோம். மின்சாரம், குடிநீர் இணைப்பு பெற்றுள்ளோம்.
வீடுகளை காலி செய்யக்கூடாது
இந்தநிலையில் நாங்கள் குடியிருக்கும் இடம் ஓடை புறம்போக்கு நிலம் என்பதால் வீட்டை காலி செய்யுமாறு மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் கொடுத்து தொடர்ந்து நிர்பந்தித்து வருகிறார்கள். ஓடைபுறம்போக்கு நிலம் என்றாலும் பாதிப்பு இல்லாத மேட்டுப்பகுதியில் தான் வசிக்கிறோம். எங்கள் வீடு இருக்கும் இடத்தை கூட சுருக்கிக்கொள்கிறோம். வீடுகளை காலி செய்யாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.
இதுபோல் சந்தைப்பேட்டை அம்பேத்கார் நகர் பகுதியில் 40 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருக்கும் துப்புரவு தொழிலாளர்கள் உள்ளிட்டவர்களையும் வீட்டை காலி செய்யுமாறு மாநகராட்சி அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து அம்பேத்கார் நகர் பகுதியை சேர்ந்த மக்கள் நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் மனு கொடுத்து முறையிட்டனர்.

Next Story