தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 17 March 2022 10:28 PM IST (Updated: 17 March 2022 10:28 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்

திண்டுக்கல்:
கால்வாயில் தேங்கிய கழிவுநீர்
நிலக்கோட்டை தாலுகா விளாம்பட்டி ஊராட்சி டோபி காலனியில் புதிதாக அமைக்கப்பட்ட சாக்கடை கால்வாயில் கழிவுநீர் வழிந்தோட வசதி செய்யப்படவில்லை. இதனால் கழிவுநீர் வெளியேறாமல் கால்வாயிலேயே தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. எனவே கால்வாயை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சிவா, விளாம்பட்டி.
குடிநீர் குழாயில் உடைப்பு
சின்னமனூர் ஒன்றியம் காமாட்சிபுரம் இந்திராநகரில் பதிக்கப்பட்ட குடிநீர் குழாயில் சில இடங்களில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக வெளியேறுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சரவண புதியவன், தேனி.
குண்டும், குழியுமான சாலை
ஒட்டன்சத்திரத்தில் இருந்து காவேரியம்மாபட்டிக்கு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வருவார்களா?
-ராமன், காவேரியம்மாபட்டி.
அதிகரிக்கும் தெருநாய்கள் தொல்லை
குஜிலியம்பாறை தாலுகா பாளையம் அருகில் உள்ள முத்தம்பட்டியில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இரவில் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள், நடந்து செல்பவர்கள் என அனைத்து தரப்பினரையும் தெருநாய்கள் துரத்திச்சென்று கடிக்கின்றன. எனவே தொல்லை கொடுக்கும் தெருநாய்களை பிடித்து அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செல்வராஜ், முத்தம்பட்டி.

Next Story