கள்ளக்குறிச்சி உழவர் சந்தையை புதுப்பிக்கும் பணி தீவிரம்


கள்ளக்குறிச்சி உழவர் சந்தையை புதுப்பிக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 17 March 2022 10:35 PM IST (Updated: 17 March 2022 10:35 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி உழவர் சந்தையை புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கள்ளக்குறிச்சி, 

கள்ளக்குறிச்சி உழவர் சந்தைக்கு சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் காய்கறி, பழங்களை எடுத்து வந்து விற்பனை செய்து செல்கின்றனர். இந்த உழவர் சந்தையில் விவசாயிகள் சிலர் மண் தரையில் அமர்ந்து விற்பனை செய்து வந்தனர். இதனால் அவர்கள் தளம் அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். 

இதையடுத்து உழவர் சந்தையில் தளம், கழிவறை வசதி, வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்வதற்காக நிதி ஒதுக்கப்பட்டு, புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பணிகளை வேளாண்மை துணை இயக்குனர் உலகம்மை முருகக்கனி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகளை தரமாக முடிக்குமாறு கேட்டுக்கொண்டார். இந்த ஆய்வின்போது, சந்தை நிர்வாக அலுவலர் இசைச்செல்வன் உடனிருந்தார். 

Next Story