கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் தொடக்க கல்வி இயக்குனர் ஆய்வு


கிருஷ்ணகிரி மாவட்டத்தில்  அரசு பள்ளிகளில் தொடக்க கல்வி இயக்குனர் ஆய்வு
x
தினத்தந்தி 17 March 2022 10:38 PM IST (Updated: 17 March 2022 10:38 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் தொடக்க கல்வி இயக்குனர் ஆய்வு

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் தொடக்க கல்வி இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வு 
தமிழக பள்ளிக்கல்வித்துறையில் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக செயல்படுத்தப்பட்டு வரும், கற்றல், கற்பித்தல் பணிகளை மேம்படுத்தும் விதமாக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் ஒவ்வொரு மாணவர்களின் கற்றல் விளைவு அடைவு நிலைகளை முறையாக கண்காணித்து முன்னேற்றம் அடைய செய்ய உருவாக்கப்பட்ட “வகுப்பறை நோக்கின் செயலி”-யை ஆசிரியர்கள் எவ்வாறு பயன்படுத்தி வருகிறார்கள் என்பதையும், அரசின் திட்டங்கள் மாணவர்களுக்கு முழுமையாக சென்றடைவதை உறுதி செய்ய, கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அரசு பள்ளிகளை சென்னை தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
கற்றல் திறன் 
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளிலும் தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி ஆய்வு மேற்கொண்டார். அதன்படி வேப்பனப்பள்ளி ஒன்றியம் நாச்சிக்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தொடக்கல்வி இயக்குனர், மாணவர்களின் கற்றல் திறன், பள்ளி பதிவேடுகள், ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் உள்ளிட்டவைவை குறித்து அவர் ஆய்வு செய்தார்.  இந்த ஆய்வின் போது அந்த பள்ளி மாணவ, மாணவிகள் தனித்திறன்களுக்கு பெற்ற சான்றிதழ்களை அவரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.
இதைத்தொடர்ந்து வேப்பனப்பள்ளி அரசு மாதிரிப்பள்ளி, சாமனப்பள்ளி, ஓசூர் பள்ளிகளில் ஆய்வு செய்தார். ஆசிரியர்கள் வகுப்பறை நோக்கின் செயலியின் பயன்பாடு தொடர்பாகவும் ஆய்வு செய்தார். இதே போல் கெலமங்கலம் ஒன்றியத்தில் மாநில ஆராய்ச்சி கல்வி மையத்தின் இணை இயக்குனர் வை.குமார், பர்கூர் ஒன்றியத்தில் இணை இயக்குனர் ராஜேந்திரன் ஆகியோர் ஆய்வு செய்தனர். 
இந்த ஆய்வின் போது, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் நாராயணா, வட்டார கல்வி அலுவலர்கள் பழனிசாமி, மரியாரோஸ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கணேசன், சர்தார் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.

Next Story