விவசாயிகளுக்கு புதிய இலவச மின் இணைப்பு
விவசாயிகளுக்கு புதிய இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டது.
திருப்பத்தூர்
கந்திலி ஒன்றியம் சுந்தரம்பள்ளி, நத்தம், காக்கங்கரை, அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலவி வரும் குறைந்த மின்னழுத்தத்தை சரி செய்ய செவ்வாத்தூரில் ரூ.12½ லட்சம் செலவவில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது. புதிய டிரான்ஸ்பார்மர் தொடக்க விழா மற்றும் தமிழக முதல்-அமைச்சரின் விவசாயிகளுக்கு ஒரு லட்சம் மின் இணைப்புகள் வழங்கும் திட்டம் மூலம் விவசாயிகளுக்கு புதிய இலவச மின் இணைப்புகள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாத்தூர், சொக்கம்பட்டி, நத்தம் அந்தந்த கிராமங்களில் நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்ட மேற்பார்வை பொறியாளர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். செயற்பொறியாளர் சுப்பிரமணி முன்னிலை வகித்தார். உதவி செயற்பொறியாளர் பிரபு வரவேற்றார். நல்லதம்பி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு புதிய டிரான்ஸ்பார்மரை தொடங்கி வைத்து, விவசாயிகளுக்கு இலவச மின் பிணைப்புகளை வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் கந்திலி ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் ராஜமாணிக்கம், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கே.எஸ். அன்பழகன், கந்திலி ஒன்றியக்குழு தலைவர் திருமதி திருமுருகன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி பொறியாளர் பி.சோமு நன்றி கூறினார்.
2 காலம்.
Related Tags :
Next Story