3 டிப்பர் லாரிகள் பறிமுதல்


3 டிப்பர் லாரிகள் பறிமுதல்
x
தினத்தந்தி 17 March 2022 10:45 PM IST (Updated: 17 March 2022 10:45 PM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் இருந்து தேனிக்கு அனுமதிச்சீட்டு இன்றி வந்த 3 டிப்பர் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

உத்தமபாளையம்:

தேனி வட்டார போக்குவரத்து அலுவலர் செல்வகுமார் உத்தரவின்பேரில், உத்தமபாளையம் மோட்டார் வாகன ஆய்வாளர் சுந்தரராமன் தலைமையிலான குழுவினர் போடி முந்தல் பகுதியில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது கேரளாவில் இருந்து வந்த 3 டிப்பர் லாரிகள் அனுமதிச்சீட்டு இன்றியும், சாலை வரி செலுத்தாமலும் தேனி மாவட்டத்துக்கு வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த லாரிகளை, அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

இதேபோல் உத்தமபாளையத்தில் நடந்த சோதனையின்போது பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த சுற்றுலா வேன் சிக்கியது. 

மேலும் சாலை வரி செலுத்தாமலும், காப்புச்சான்று இல்லாமலும் வந்த மினிலாரி பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அந்த 2 வாகனங்களுக்கும் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Next Story