விஷம் குடித்து விவசாயி தற்கொலை
மூங்கில்துறைப்பட்டு அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டாா்.
மூங்கில்துறைப்பட்டு,
மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள ரங்கப்பனூர் மெயின் ரோட்டில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் வாயில் நுரைதள்ளியபடி பிணமாக கிடந்தார். அவருடைய உடல் அருகில் விஷ பாட்டில்கள் கிடந்தன. இதைபார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் வடபொன்பரப்பி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, இறந்து கிடந்தவரின் உடலை பார்வையிட்டு அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்தனர். விசாரணையில் அவர், சங்கராபுரம் அருகே உள்ள அரசம்பட்டு பகுதியை சேர்ந்த ரங்கநாதன் மகன் விவசாயி சம்பத் (வயது 45) என்பது தெரியவந்தது. இதையடுத்து சம்பத்தின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சம்பத் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. ஆனால் அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பத் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story