தீக்குளித்து பெண் தற்கொலை


தீக்குளித்து பெண் தற்கொலை
x
தினத்தந்தி 17 March 2022 11:46 PM IST (Updated: 17 March 2022 11:46 PM IST)
t-max-icont-min-icon

வலங்கைமான் அருகே தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

வலங்கைமான்:
வலங்கைமான் அருகே தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
குடும்ப தகராறு
திருவாரூர் மாவட்டம் வலங்கைமானை அடுத்த மணலூர் குடியான தெருவைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவருடைய மனைவி இலக்கியா(வயது 28) இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கணவன், மனைவிக்கு இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் இலக்கியா மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.
தீக்குளித்தார்
இந்த நிலையில் சம்பவத்தன்று இலக்கியா வீட்டில் இருந்து மண்எண்ணெய்யை எடுத்து தனது உடலில் ஊற்றி தீவைத்து கொண்டார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை  பலனின்றி இலக்கியா பரிதாபமாக இறந்தார்.
 இதுகுறித்து தகவல் அறிந்த வலங்கைமான்  போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய் மற்றும் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
உதவி கலெக்டர் விசாரணை
மேலும் இதுகுறித்து புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இலக்கியாவுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆவதால் உதவி கலெக்டர் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story