பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு
தொண்டியில் காவல்துறை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு குற்றங்களில் இருந்து எவ்வாறு விடுபட வேண்டும் என்பது பற்றிய விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
தொண்டி,
தொண்டி வில்கம் உயர்நிலைப்பள்ளியில் காவல்துறை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு குற்றங்களில் இருந்து எவ்வாறு விடுபட வேண்டும் என்பது பற்றிய விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பள்ளி நிர்வாகி சகாயமேரி தலைமை தாங்கினார். .அனைவரையும் ஆசிரியர் பிரிஸ்கா ஜோதி வரவேற்றார்.இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் கலந்து கொண்டு பள்ளி மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.சிறிய சிறிய தவறு செய்யும் போது படிப்பு வீணாகிவிடும்.எதிர்காலம் கேள்வி குறியாகிவிடும்.மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தினால் அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும் வெளிநாடுகளுக்கு சென்று தங்களின் குடும்பத்தை நல்ல நிலைக்கு கொண்டு வரமுடியும்.செல்போன் பார்ப்பதை மாணவர்கள் தவிர்க்க வேண்டும்.செல்போன் மாணவர்களை சீரழிக்கும்வேலையை செய்து வருகிறது என்று அவர் அறிவுரை கூறினார். இதில் பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் ஆசிரியை சகாயம் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story