இளம்பெண் தீக்குளித்து தற்கொலை


இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
x
தினத்தந்தி 17 March 2022 11:53 PM IST (Updated: 17 March 2022 11:53 PM IST)
t-max-icont-min-icon

சாக்கோட்டை போலீஸ் சரகத்தில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

காரைக்குடி,

சாக்கோட்டை போலீஸ் சரகம் ஜெயங்கொண்டான் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி சுதா (வயது 20). சிறுவயதிலேயே தாய் தந்தையை இழந்த இவர் தனது சித்தி வீட்டில் வளர்ந்து வந்தார். இந்நிலையில் அவரது 2 சித்திகளில் ஒருவர் சமீபத்தில் இறந்து விட்டார். அதன்பின் பாண்டி சுதா இறந்துபோன சித்தியை நினைத்து எப்போதும் அழுது கொண்டே எந்த வேலையும் செய்யாமல் வீட்டில் இருந்துள்ளார். இதனை மற்றொரு சித்தி கண்டித்து இறந்தவரை நினைத்து அழுது கொண்டே இருக்கிறாய் போய் வேலையைப்பார் என்று சத்தம் போட்டுள்ளார். இதனால் மனமுடைந்த பாண்டி சுதா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கேனில் இருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.தீ மளமளவென்று உடலெங்கும் பற்றி எரிய அவர் அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்தனர். ஆனாலும் பாண்டி சுதா இறந்துவிட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் சாக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story