காரை கண்மாயை ஆக்கிரமித்த சீமைக்கருவேல மரங்கள் அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
காரை கண்மாயை சீமைக்கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளது.
காரையூர்:
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி தாலுகா காரையூரில் காரை கண்மாய் உள்ளது. இந்த கண்மாய் முழுவதும் அதிக அளவில் சீமைக்கருவேல மரங்கள் இடை வெளியில்லாமல் மண்டிக் கிடக்கிறது. இதனால் கண்மாய் காடுபோல் காட்சியளிக்கிறது. இந்த கண்மாயை விளை நிலங்கள் நம்பி இருந்தன. ஆனால் தற்போது அதிக அளவில் சீமைக்கருவேல மரங்கள் மண்டி கிடப்பதால் வயல்களில் விவசாயம் செய்ய முடியாத சூழல் உருவாகியுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கண்மாயில் உள்ள சீமைக்கருவேல மரங்களை முழுவதும் அகற்ற வேண்டும் என்று விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story